

🌀 ஒரே எண்ணத்தில் சிக்கிட்டீங்களா? எப்படி வெளிவரலாம்?
ஒரு சின்ன யோசனை போதும் – நம்ம மூளை ரொம்பவே ஓவரா ஓட ஆரம்பிச்சிடும். அந்த ஓயாத “ஓவர் திங்கிங்” சுழற்சி – பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் திருப்பி நினைத்துக் கொள்வது, எதற்கும் தீர்வு இல்லாமல் நம்ம மனதையும் உடம்பையும் களைப்பாக்கும்.
🎯 உதாரணமாக :
- Interview முடிந்து வந்ததும், அந்த one-one-one convo-வை ஏன் analyse பண்ணிட்டு இருக்கீங்க?
- ஒரு WhatsApp message tone சரியா இல்லையா என்று வேதனை?
- நான் பேசியது யாரையாவது காயப்படுத்தியிருக்குமோ என்று மனசுலச் சின்னச்சின்ன குற்ற உணர்வு ஏற்படுது.
- Instagram-ல பார்த்த ஒரு story யாருக்காக போடப்பட்டது என்று தெரியாமலே மனசுல கலக்கம் வந்திருக்கு.
- “இதை இப்படி செய்திருக்கலாமோ? அப்படி செய்திருந்தா நல்லா இருந்திருக்கும் போல…” — இப்படிச் சுழன்றுகிட்டே இருக்கு.
இவை எல்லாம் ஓவர் திங்கிங்க்-னு சொல்லப்பட்றது. அது “நல்ல யோசனை” மாதிரி தோன்றலாம், ஆனா உண்மையில அது உங்களைக் கலங்க வைக்கிறது, தீர்வு இல்லாமல்.
😵 ஓவர் திங்கிங் = Feel Trap
இரவு தூங்கணும்… ஆனா நம்ம மூளை sleep mode-க்கு ready ஆக இல்ல.
Just like it drank 3 cups of kaapi 😅
மனசு இதற்கெல்லாம் “தீர்வு தேடுறேன்”ன்னு சொல்லி, இன்னும் சிக்கிக்கிற மாதிரி வேலை செய்யும்.
“இது problem-solving மாதிரி தோன்றலாம். ஆனா உண்மையில இது emotional clutter-க்கும் stress-க்கும் காரணம்.”
– Bhavya Shah, Psychologist, Saifee Hospital, Mumbai
அதனாலதான் இப்படி இருக்குற மக்கள் decision எடுக்க முடியாம procrastinate பண்ணுவாங்க. Confidence இல்லாத மாதிரி second-guess பண்ணுவாங்க.
🚧 The Mental Traffic Jam (மனசுல போக்குவரத்து நெரிசல்!)
ஒன்றைமட்டும் ரிபீட்டா யோசிக்குறது, உங்கள் மூளையை பிஸியாக வைத்து விடும். அதனால புதிய யோசனைகள், செயல்கள், சந்தர்ப்பங்கள் எல்லாம் filter ஆயிடும்.
- சிலர் past mistakes-ல சிக்கிக்கொள்வாங்க.
- சிலர் future-அ கொஞ்சம் “over plan” பண்ணுவாங்க.
😓 “Careful”ஆ இருப்பதுக்கும், “Consumed” ஆக இருப்பதுக்கும் மிக நெருங்கிய தொடர்பு தான்.
“நீங்க யோசிக்கிறது நிம்மதியைக் கொண்டு வந்தா – ஓகே.
ஆனா அது இன்னும் அதிக கவலை, தளர்ச்சி உண்டாக்குது என்றா… அதுதான் ‘ஓவர் திங்கிங்’!”
– Bhavya Shah
🌈 Chaos-லிருந்து Clarity-க்கு – எப்படி?
மூளை ஓயவே கூடாது-னு இருக்கு… அதனால நிறுத்த முடியலன்னா fine, but அதை நன்கு handle பண்ணனும். Bhavya Shah சில techniques சொல்றாங்க:
📝 1. Brain Dump
மனதில் என்ன இருக்குதோ அதெல்லாம் plain-a paper ல எழுதி பாருங்க. Paper-க்கு கொடுத்த பிறகு mind-light ஆகும்.
⏳ 2. Worry Window
15-20 நிமிடம் full permission குடுங்க கவலை பண்ண. அதுக்கப்புறம் stop. Attention-ஐ divert பண்ணுங்க.
👂 3. Senses-ஐ Use பண்ணுங்க
சின்ன விஷயங்கள் – Music கேளுங்க, நல்ல walk போங்க, முகத்தில குளிர்ந்த தண்ணீர் பீச்சுங்க. Body-ல் connect பண்ணி mind-ஐ anchor பண்ணுங்க.
🗣️ 4. Talk it Out
நம்ம பேச்சு நம்ம மனதில் clarity கொடுக்கும்னு நிறைய பேருக்கு தெரியாது. Just speak it out.
💡 கடைசி டிப்:
Overthinking-னு சொல்லுறது ஒரு தவறு கிடையாது — ஆனால் அதில சிக்கிகொல்ல கூடாது.
“ஒவ்வொரு வார்த்தையும் நம்ம மனசுல ஒரு சண்டை மாதிரி ஓடிகிட்டு இருக்கு.
நிம்மதியாய் இருக்கணும்னா, அந்த யோசனைகளை சிந்தனையா மாற்றணும்.”
🧠 “எண்ணங்களை நிர்வகிக்கணும், அது நம்மையே நிர்வகிக்குற நிலைக்கு வராம இருக்க. (இது கடினம் தான் ஆனால் சாத்தியமற்றது இல்ல)”
📌 உங்கள் பக்கத்துல யாராவது இருப்பாங்க – இது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.
Leave a comment